அனல் மின்நிலையத்தில் பழுது... மின் உற்பத்தி "ஸ்டாப்"

frame அனல் மின்நிலையத்தில் பழுது... மின் உற்பத்தி "ஸ்டாப்"

Sekar Chandra
சென்னை:
ஏற்கனவே நொந்து போய் உள்ள நிலையில் இது அடுத்த பிரச்னையா என்று மக்கள் கவலையடைந்துள்ளனர்.


சென்னையில் தற்போது அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மக்களை வேதனையில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நொந்து போய் உள்ளனர்.


திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு தலா, 210 மெகாவாட் உற்பத்தி திறனுடைய, 3 அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் அலகில், பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


இதனால், வட சென்னை மின் நிலையத்தில் இருந்து, 210 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அட இது என்ன இடியாப்ப சிக்கலா... சீக்கிரம் சரி பண்ணுங்கப்பா...



Find Out More:

Related Articles:

Unable to Load More