குழந்தைகளுக்கு சூடு போட்டு பிச்சை எடுத்த பெண் பொதுமக்கள் தகவலால் வளைத்து பிடித்த போலீசார்

Sekar Chandra
சென்னை:
சென்னை காசிமேட்டில் குழந்தைகளுக்கு சூடு போட்டு பிச்சை எடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. 


 
காசிமேடு, சூரிய நாராயணா தெருவில் கடந்த சில நாட்களாக ஒரு பெண், 2 பெண் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வந்துள்ளார். குழந்தைகளின் நிலை பரிதாபமாக இருந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


உடன் அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பின்னர் குழந்தைகள் மீட்பு காவலர்கள் அந்த பெண்ணிடம் இருந்த 2 குழந்தைகளையும் கைப்பற்றி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


இந்த பெண் ஏற்கனவே சென்னை சென்ட்ரல் பகுதியில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வந்தபோது அவரிடம் இருந்து ஏற்கனவே 2 குழந்தைகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இவர் குழந்தைகளுக்கு சூடு வைத்து பிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரிடம் இருந்து தற்போது வரை 4 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த குழந்தைகள் தன்னுடைய குழந்தைகள் தான் என அந்த பெண் கூறிவந்தாலும், காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
குழந்தைகளுக்கு சூடு போட்டு அதை காண்பித்து பிச்சை எடுத்த அந்த பெண் தாயா... அல்லது பேயா என்று மக்கள் டென்ஷனாகி உள்ளனர்.


Find Out More:

Related Articles: