நடவடிக்கை எடுங்க... உடனே எடுங்க... பா.ம.க வலியுறுத்தல்

Sekar Chandra
சென்னை:
எடுங்க... நடவடிக்கை எடுங்க... உடனே எடுங்க என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். எதற்காக தெரியுங்களா?


மேட்டூர் அரசு மருத்துவமனையில் 16 பேரின் கண் பார்வை பறிபோன சம்பவத்தில்தான்.  இந்த அதிர்ச்சி தகவல்கள்தான் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்  பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:


மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஏழை, எளிய மக்கள் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இதில் 16 பேரின் கண் பார்வை பறிபோன சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


இந்த தவறுக்கு யார் காரணம்? எப்படி இந்த தவறு நடந்தது என்று தமிழக சுகாதாரத்துறை உடனே விசாரணை நடத்த வேண்டும்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்வை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். 


Find Out More:

Related Articles: