அண்ணே என்னை என் வீட்டில் விட்டுடுங்கள்... வழிமாறிய அரிய ஆந்தை

frame அண்ணே என்னை என் வீட்டில் விட்டுடுங்கள்... வழிமாறிய அரிய ஆந்தை

Sekar Chandra
கரூர்: 
அண்ணே... அண்ணே... என்னை பாருங்கள்... என் அழகை பாருங்கள்... அப்படி என்னை பற்றியும் எழுதுங்கள் என்று சொல்ல வந்ததோ இந்த அரிய ஆந்தை.


எங்கு வந்தது தெரியுங்களா? கரூர் நகரில் பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் மிக அரிய வகையை சேர்ந்த ஆந்தை வந்து உட்கார்ந்தது. 


காட்டு பகுதியில் இருக்கும் அரிய வகை ஆந்தை நகர் பகுதிக்கு வந்தால் புதுசாகத்தானே இருக்கும். என்னடா இது வம்பு ஒரு பக்கம் கூட மரத்தை காணோமே என்று திக்கி திணறி போய் விட்டது. இங்கு திரும்பிய பக்கமெல்லாம் ஒரே பில்டிங்கா இருக்கே என்று நினைச்சுச்சோ என்னவோ... சரி பத்திரிகை அலுவலகத்துக்கு போனா நம்மள சரியான இடத்துல சேர்த்திடுவாங்கன்னு வந்துச்சோ தெரியலை. இங்க வந்து உட்கார்ந்திடுச்சு...


ஆந்தையை பார்த்த பத்திரிகை ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்க அவங்க வந்து அந்த அரிய ஆந்தையை பிடித்து வனத்துறையினரிடம் ஓப்படைத்தனர். அப்புறம் என்ன ஆந்தையோட எண்ணம் சரியாகத்தானே இருந்திருக்கு. இனி அது போக வேண்டிய இடத்துக்கு போயிடும்ல்ல...


Find Out More:

Related Articles:

Unable to Load More