ரூ.20 லட்சம் மதிப்பு பழமை வாய்ந்த நகைகள்... தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த முடிவு

Sekar Chandra
திருப்பத்தூர்:
தோண்ட, தோண்ட தங்கம் என்று திருப்பத்தூர் ஏரியில் கிடைத்து வரும் நகைகளால் அப்பகுதி தற்போது தொல்லியல் துறையினர் வசமாகி உள்ளது.


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே வெங்காயப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேடியப்பன் கோவில் பராமரிப்பு பணி நடந்தது. அப்போதுதான் தங்கம்... தங்கம்... என்று மக்கள் அதிர்ச்சியடையும் சம்பவம் நடந்தது.
ஏரியில் நடந்த பராமரிப்பு பணியின் போது சுமார் 2 அடி ஆழம் தோண்டிய போது டாலருடன் கூடிய 57 சவரன் தங்க சங்கிலி கண்டெடுக்கப்பட்டதுதான் அந்த ஆனந்த அதிர்ச்சிக்குதான் காரணம். 


இந்த தகவல் விஏஓ., மற்றும் வருவாய் துறையினரிடம் தெரிவிக்கப்பட்டு அந்த தங்கச்சங்கிலி ஒப்படைக்கப்பட்டது.  
அந்த நகை மன்னர் காலத்து நகையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது. 


 
தொடர்ந்து நடந்த பணியில் அதே இடத்தில் இருந்து தங்க சங்கிலியின் அறுந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் எடை 66 கிராம். இதையடுத்து அங்கு ஆய்வு நடத்த தொல்லியல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி தற்போது தொல்லியல் துறையினர் வசமாகிறது.


Find Out More:

Related Articles: