போலீசார் என்ன செய்யறாங்க... பேப்பர் படித்து தெரிந்த கொண்ட ராம்குமார்

frame போலீசார் என்ன செய்யறாங்க... பேப்பர் படித்து தெரிந்த கொண்ட ராம்குமார்

Sekar Chandra
சென்னை:
போலீசார் என்ன செய்யறாங்க... என்ன செய்யறாங்க... தினமும் பேப்பர் படித்து சுவாதி கொலை வழக்கை தெரிந்து கொண்டுள்ளான் ராம்குமார். 


நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதியை கொலை செய்துவிட்டு தப்பிய ராம்குமார் சுவாதியின் செல்லையும் சேர்த்தே எடுத்துச்சென்றான். காலையில் 6.45 மணியளவில் செல்லை சுவிட்சை ஆப் செய்துள்ளான். பின்னர் 8.45 மணியளவில் செல்லை ஆன் செய்துள்ளான். அப்போது சுவாதிக்கு அவரது பிரெண்ட் அனுப்பிய எஸ்எம்எஸ் வந்து சேர்ந்துள்ளது. இதனால் உடனே செல்லை ஆப் செய்து விட்டான்.


அங்கு தான் அவனுக்கு செல்போன் ஆப்பு வைத்துள்ளது. செல்போன் காட்டிய டவர் சூளைமேடு. இதனால் கொலையாளியின் இடம் குறித்து போலீசாருக்கு ஒரு துப்பு கிடைத்தது. இதை வைத்துதான் போலீசார் தங்கள் விசாரணையை முடுக்கி விட முடிந்துள்ளது. 


பின்னர் சென்னையிலிருந்து தன் சொந்த ஊருக்கு சென்ற ராம்குமார் வீட்டில் தனக்கு ஒரு பிரச்னை அதனால் வந்து விட்டேன் என்று கூறிவிட்டு ஆடு மேய்த்து வந்துள்ளான். போலீசார் எப்படி விசாரணை மேற்கொள்கின்றனர் என்று தெரிந்து கொள்ள தினமும் பேப்பரை படித்து வந்துள்ளான் என்று தற்போது தெரியவந்துள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More