வாஷிங்டன்:
தடை விதிக்கப்பட்டவர்கள் லிஸ்டில் வடகொரிய அதிபர் கிம் இடம் பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடகொரியாயின் தொடர்ந்த அணுகுண்டு சோதனை, ஏவுகணை சோதனைகள் உலக அரங்கில் பரபரப்பையும், கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் வடகொரியா சோதனை நடத்தும் போது ஐ.நா மட்டுமல்ல அமெரிக்காவும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது.
ஆனால் இதுகுறித்து வடகொரியா எவ்விதத்தில் சட்டைசெய்யவில்லை. இந்நிலையில் உள்நாட்டில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்டோருக்கான கருப்பு பட்டியலில் இவரை அமெரிக்கா சேர்த்துள்ளது. கிம் ஜாங் உன் முதன் முதலாக இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். உலகின் அடக்குமுறை நாடுகளில் வடகொரியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.
கிம் ஜாங்-உன்னுடன் உயர் அதிகாரிகள் 10 பேரும் அந்த தடை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.