சென்னை:
மக்களின் ஜனாதிபதி என்று பெயர் பெற்றவர் அப்துல்கலாம் அவர்கள். நம் நாடு அணுசக்தியில் மட்டுமின்றி விஞ்ஞானத்திலும் வளர முக்கிய காரணமாக இருந்தவர்.
இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்ற பெருமையுடைய ஜனாதிபதி பதவியை வகித்தவர். வாழ்ந்த காலம் வரை எளிமையும், நேர்மையுமாக விளங்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். அணுசக்தியில் இந்தியாவை மற்ற நாடுகள் வியந்து பார்க்க வைத்த தலைசிறந்த விஞ்ஞானி. மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்த ஆசான். இப்படி பன்முகம் கொண்ட அவருக்கு இன்னொரு முகமும் இருந்தது தெரியுங்களா?
தெரிஞ்சுக்குவோமா! அது என்னன்ன... அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞர் என்பதுதான் அது. இசையின் மீது மிகுந்த நாட்டம் கொண்ட அவர் வீணை வாசிப்பதில் வல்லவராம். அறிந்து கொண்டதில் நான்கு.