மறந்துடுச்சா... மத்திய அரசு... மாமனிதர் அப்துல் கலாமை மறந்திடுச்சா?

Sekar Chandra
ராமேஸ்வரம்:
மறந்ததும் ஏனோ... அவரை மறப்பதும் நியாயம் தானோ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. 


மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடப் பணிகள் நத்தையின் வேகத்தை விட ரொம்ப, ரொம்ப மெதுவாக நடப்பதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த பணிகள் குறித்து மத்திய அரசு மறந்து விட்டதோ என்று என்னத் தோன்றுகிறது. பணிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன என்கின்றனர் விபரமறிந்தவர்கள். இதில் எது உண்மை என்பதை மத்திய அரசுதான் தெளிவாக்க வேண்டும்.


மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. கடந்த ஆண்டு ஜீலை 27ம் தேதி ஷில்லாங் போயிருந்தபோது அவர் மரணமடைந்தார். அவரது உடல் ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


இந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்காக தமிழக அரசும் இடம் ஒதுக்கியது. இதெல்லாம் ரொம்ப பழைய கதை. பணிகளின் வேகம் ரொம்ப மந்த கதியிலேயே உள்ளது. இதுதான் நம் நாட்டை உயர்த்திய நேர்மையான மனிதருக்கு மத்திய அரசு செய்யும் மரியாதையா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


மத்திய அரசு அதிகாரிகள் அடிக்கடி வருகிறார்கள். ஆய்வு செய்கிறார்கள். போகிறார்கள். அடக்க ஸ்தலத்தை சுற்றிவேலி அமைத்துள்ளனர். அது மட்டும்தான் இங்கு நடந்துள்ள ஒரே வேலையாகும் என்று தெரிவிக்கும் மக்கள் மத்திய அரசு அப்துல்கலாமை மறந்து விட்டது போல் உள்ளது என்று மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


அதேசமயம் டில்லியில் நினைவிடம் அமைக்கும் பணியில் ஆம்ஆத்மி கட்சி படு வேகம் காட்டி வருகிறது. 27ம் தேதி ஏற்கனவே அறிவித்தபடி கலாம் நினைவிடம் திறக்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இங்கு கலாம் பயன்படுத்திய பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. அப்போ... மத்திய அரசு மறந்திடுச்சா... அப்துல் கலாம் என்ற மாமனிதரை மறந்து விட்டதா?



Find Out More:

Related Articles: