திமுக முன்னாள் எம்.பி.க்கு சொந்தமான 40 இடங்களில் அதிரடி ரெய்டு

frame திமுக முன்னாள் எம்.பி.க்கு சொந்தமான 40 இடங்களில் அதிரடி ரெய்டு

Sekar Chandra
சென்னை:
திமுக முன்னாள் எம்.பி.க்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


திமுக முன்னாள் எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நுங்கம்பாக்கம், கிழக்கு தாம்பரம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


மேலும் அவருக்கு சொந்தமான மதுபான ஆலை, நட்சத்திர விடுதி உட்பட  40 இடங்களில் சோதனை நடக்கிறது. அவரது உறவினர் வீடுகளிலும் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. வருமான வரியை முறையாக கட்டாததால் இந்த சோதனை நடக்கிறதாம்.


Find Out More:

Related Articles:

Unable to Load More