தூங்கத்தான் செய்தார்... காங்கிரசுக்கு குவியுது கண்டனம்

frame தூங்கத்தான் செய்தார்... காங்கிரசுக்கு குவியுது கண்டனம்

Sekar Tamil
ஆமதாபாத்:
தமிழ் சினிமா இம்சை அரசன் படத்தில் அரியணையில் உட்கார்ந்து வடிவேலு தூங்கியதாக கூறி அவரது அம்மா திட்டும் நகைச்சுவை காட்சி ரசிகர்களை பதம் பார்த்தது... அதுபோல் மக்கள் பிரச்னைகளை பேசும் லோக்சபாவில் தூங்கியுள்ளார் இந்த பிரபலம்.


யார் தெரியுங்களா? தெரிஞ்சுக்குவோம் வாங்க... குஜராத்தில் பசுவை கொன்று, மாட்டுத் தோலை வைத்திருந்ததாக தலித் இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரம் பார்லியின் இரு அவைகளிலும் பெரும் புயலை கிளப்ப... இந்த விவகாரத்தின் போது எது நடந்தால் எனக்கென்ன என்பதுபோல் காங்., துணைத்தலைவர் ராகுல் காந்தி தூங்கிய விவகாரம் தான் தற்போது மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 


லோக்சபாவில் நடந்த விவாதத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்து கொண்டு இருக்க... தேமே என்று காங்., துணைத் தலைவர் ராகுல் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்க இந்த படம்தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. 


ராகுல் தூங்கவில்லை, கீழே பார்த்து கொண்டிருந்தார் என்று காங்கிரஸ் சப்பைக்கட்டு கட்டினாலும் எதிர் கட்சிகள் வறுத்தெடுத்து வருகின்றன.


குஜராத்தில் சமூக வலைதளங்களில் இந்த போட்டோ மிக வேகமாக வைரலாகி வருகிறதாம். பாதிக்கப்பட்ட தலித் இளைஞர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ராகுல் இன்று குஜராத் செல்ல உள்ள நிலையில் இந்த படம் அவர் மீதானே மதிப்பை குலைத்துள்ளது. 


Find Out More:

Related Articles:

Unable to Load More