ஈரமில்லாத கொடூர இளைஞன்... மாற்றுத்திறனாளிகள் 19 பேர் பலி

frame ஈரமில்லாத கொடூர இளைஞன்... மாற்றுத்திறனாளிகள் 19 பேர் பலி

Sekar Tamil
டோக்கியோ:
மனதில் ஈரமே இல்லாத வாலிபரால் மாற்றுத்திறனாளிகள் 19 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்துள்ளது. இது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஜப்பான் நாட்டில் கனகவா மாகாணத்தில் உள்ள சகமிஹரா நகரில் முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. இங்கு மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லமும் உள்ளது. இந்நிலையில் இந்த மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் புகுந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தி படுகொலை செய்தார். இதில் 19 பேர் பலியாகினர். பலர் கத்திகுத்தில் படுகாயமடைந்தனர்.


அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உடன் இதுகுறித்து இல்ல நிர்வாகி ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த கொடூர செயலை செய்த அந்த வாலிபர் 3 மணியளவில் போலீசில் சரணடைந்துள்ளார். 


அந்த வாலிபர் இந்த இல்லத்தின் முன்னாள் பணியாளர் என்று கூறப்படுகிறது. எதற்காக இப்படி செய்தார் என்பது குறித்து போலீசார் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More