பார்சலில் மலைப்பாம்பு... அதிர்ச்சியில் அஞ்சல் ஊழியர்கள்

Sekar Tamil
சென்னை:
அடப்பாவிங்களா... வற்றல் குழம்பை கொரியரில அனுப்புவது போலும், மனைவி, குழந்தைகளை அனுப்பவதும் போலும் சினிமாவில் காமெடி செய்தாங்க. சிரிச்சோம். ஆனா அதுக்காக இப்படியா... என்று அச்சத்தில் உள்ளனர் சென்னை விமான நிலைய அஞ்சல் ஊழியர்கள்.


காரணம் என்ன தெரியுங்களா? தைவான் நாட்டில் இருந்து, கடந்த 24ம் தேதி இரவு, 'வீட்டு உபயோகப் பொருட்கள்' என்று எழுதப்பட்ட பார்சல் ஒன்று சென்னை விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய அஞ்சலகத்திற்கு வந்துச்சுங்க.


ஆனால் அந்த பார்சலை பார்த்த ஊழியர்களுக்கு மனதில் ஏதோ குறுகுறுவென்ற சந்தேகம் எழுந்துள்ளது. சந்தேகப்படும் பார்சலை பிரித்து பார்க்கலாம் என்பதால் அஞ்சல் ஊழியர்கள் அந்த பார்சலை நேற்று பிரித்து சோதனையிட்டனர்.


பார்சலில் மேல் எழுதியிருந்தபடி உள்ளே வீட்டு உபயோக பொருட்கள் இருந்தது என்னவே உண்மைதான். ஆனால் அப்புறம் தானே வில்லங்கமும் ஒட்டியிருந்தது. அந்த பொருட்களுடன் ஒரு பையில் 1 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது. பார்சலை பிரித்த ஊழியர்கள் நிலை எப்படி இருந்து இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். பாம்பு என்றாலே பதறி ஓட்டம் பிடிக்கும் மக்கள் மலைப்பாம்பை பார்த்தால் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டனர். 


இந்த பார்சல் சென்னை கே.கே.நகரில் வசிக்கும் ஒருவரின் முகவரிக்கு வந்துள்ளது. அனுப்பியவரின் முகவரி தைவான் நாட்டு மொழியில் இருந்தது. உடன் இதுகுறித்து விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.


தொடர்ந்து அந்த மலைப்பாம்பு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க சுங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். என்னப்பா... இப்படி மலைப்பாம்பை அனுப்புறீங்களேப்பா...



Find Out More:

Related Articles: