சிட்னி:
ஆக்சிஜன் வாயுவிற்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு (சிரிப்பூட்டும் வாயு) செலுத்தியதால் குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சிட்னி ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் ‘பேங்க்ஸ்டவுன்-லிட்காம்பி’ ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் புதிதாக பிறந்த 2 குழந்தைகளுக்கு ஆக்சிஜன் வாயு செலுத்துவதற்கு பதிலாக சிரிப்பூட்டும் வாயு என்று அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடை தவறுதலாக செலுத்தி விட்டனர்.
இதில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மற்றொரு குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சிட்னியை விமர்சகர்கள் சட்னி ஆக்கி வருகின்றனர்.