சென்னை:
யாருப்பா... அது... அவரை விசாரித்தீர்களா என்று கேள்வி எழுந்து சுவாதி கொலையில் மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. விஷயம் என்ன தெரியுங்களா?
தமிழகத்தை உலுக்கிய சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் கைதாகி உள்ளார். ஆனால் இந்த வழக்கில் தினம் தினம் ஏதாவது ஒரு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவரை ஏன் விசாரிக்கவில்லை என்ற கேள்வியுடன் ஒரு திடுக் தகவல் வெளியாகி உள்ளது.
சின்னத்திரையில் பிரபலமான தயாரிப்பாளர் ஒருவரின் மகனும் சுவாதிக்கு நெருங்கிய நண்பராம். பிலாலையும், ராம்குமாரையும் விசாரித்த போலீசார் அந்த தயாரிப்பாளரின் மகனையும் விசாரித்தார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
அந்த நண்பரும் முஸ்லீம் என்பதால் இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு இது மேலும் ஒரு சர்ச்சையாகி உள்ளது. இந்த கொலை வழக்கு ஒரு இடியாப்ப சிக்கல் போல் எடுக்க எடுக்க முடிச்சுகளாகவே வருகிறது. ஆனால் தற்போது வரை ராம்குமார்தான் குற்றவாளி என்று போலீஸ் தரப்பில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பதை யார்தான் கண்டறிவார்களோ?