புத்திக்கெட்ட "சித்தி"... சிறுமிக்கு கொடூர கொடுமை...

frame புத்திக்கெட்ட "சித்தி"... சிறுமிக்கு கொடூர கொடுமை...

Sekar Tamil
அமெரிக்கா:
தன் கணவரின் முதல் மனைவியின் 12 வயது மகளை கொடூரமாக ஆண்டு கணக்கில் கொடுமைப்படுத்தி வந்த புத்திக்கெட்ட "சித்தி" இப்போது தனக்கு நீதிமன்றம் கொடுக்க உள்ள தண்டனைக்காக காத்திருக்கிறார். 


அந்த விஷயம் என்னவென்றால்...  அமெரிக்காவில் வாழுந்து வருபவர் இந்திய வம்சாவளி ராஜேஷ் ரனாத். இவரது இரண்டாவது மனைவி சீத்தல்.


இவர் தன் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 12 வயது மகளான சிறுமி மாயாவை பட்டினி போட்டு சித்ரவதை செய்துள்ளார்.
அதுமட்டுமா? சிறுமியை பலவிதத்திலும் கொடுமைப்படுத்தி உள்ளார். செருப்பு அணிந்த காலால் முகத்தில் எட்டி உதைப்பது, தடியால் அடித்து காயப்படுத்துவது, துடைப்பத்தின் கைப்பிடியால் தாக்குவது என்று பல்வேறு வகையிலும் சித்தியின் கொடுமையை அந்த சிறுமி அனுபவித்து வந்துள்ளார். இந்த கொடுமைகளின் வடுவாக சிறுமிக்கு  இடது மணிக்கட்டில் முறிவும் ஏற்பட்டது.


இந்த கொடுமைகள் ஒருநாள்... இரண்டு நாட்கள் அல்ல ஒன்றரை ஆண்டுகளாக இப்படியே அந்த சிறுமி தன் சித்தியின் சின்னபுத்தியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கொடுமையிலும் கொடுமையாக இதற்கு ராஜேஷ் உடந்தையாக இருந்ததுதான். தற்போது இந்த விவகாரம் கோர்ட் வரைக்கும் வந்துவிட்டது. 


தற்போது சட்டத்தின்பிடியில் சீத்தல் சிக்கி கொண்டுள்ளார். இவர் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் இவருக்கு 25 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கட்டும் சீத்தல். அப்போதுதான் அந்த சிறுமியின் வேதனை என்னவென்று தெரிய வரும்.


Find Out More:

Related Articles:

Unable to Load More