பாதுகாப்பு இல்லை... ராஜ்யசபாவில் கண்ணீர் விட்ட சசிகலா...

Sekar Tamil
புதுடில்லி:
ராஜ்யசபாவில் அதிமுக - திமுக எம்.பி.,க்கள் மோதல் தொடர்பான விவகாரம் குறித்து எழுந்த விவாதத்தின் போது பேசிய சசிகலா புஷ்பா தனக்கு டில்லியில் பாதுகாப்பில்லை என்று தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். இதற்கிடையில் இவரை கட்சியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கியது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


விவாதத்தின் போது சசிகலா புஷ்பா பேசுகையில், டில்லியில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொண்டேனே தவிர அதில் உள்நோக்கம் இல்லை. இதற்காக திருச்சி சிவா மற்றும் திமுக தலைவரிடம் நான் மன்னிப்பும், வருத்தமும் கேட்டுக் கொள்கிறேன்.


பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாததால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் இவ்வாறு கூறியபோது சசிகலா புஷ்பா கண்ணீர் விட்டு அழுததால் அவையே அதிர்ந்தது. பின்னர் பேசிய ராஜ்யசபா சபாநாயகர் குரியன், எம்.பி., என்ற முறையில் அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்றார்.


இதற்கிடையில் சசிகலா புஷ்பாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.



Find Out More:

Related Articles: