மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ள ராமர்பிள்ளை...

frame மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ள ராமர்பிள்ளை...

Sekar Tamil
புதுடில்லி:
வெகுகாலமாக போராடி பல சர்ச்சைகளை சந்தித்து நொந்து போய் இருந்தவருக்கு இப்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. விஷயம் என்னன்னா?


தமிழ்நாட்டை சேர்ந்த ராமர்பிள்ளை என்பவருடைய கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 


 1996-ம் ஆண்டு ராமர்பிள்ளை மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்து பரபரப்பை உண்டாக்கினார். பல்வேறு காரணங்களால் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை.


இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சோதனைகள் மற்றும் சர்ச்சைகளுக்கு உள்ளானார் ராமர்பிள்ளை. சரியான கல்வி அறிவு இல்லாத காரணத்தை காட்டி அவர் இந்த பெட்ரோலை கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பினர்.


அத்தோடு விட்டார்களா? அந்த பெட்ரோலில் கலப்படம் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த எதிர்ப்புகளுக்கு பின்னால் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளும், அரசியல்வாதிகளும் இருந்ததாக பரபரப்பு புகார்களும் எழுந்தன. இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராமர்பிள்ளை, தன்னுடைய மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் நேரிடையாக பார்வையிட்டு ஆதரவு அளிக்க, வரும் ஆக.14ம் தேதி முதல் ராணுவ பயன்பாட்டிற்காக அவரின் மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளனர். இதற்காக மும்பையில் உள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதையடுத்து அவர் மீண்டும் மீடியாக்களின் லைம் லைட்டிற்கு வந்துள்ளார். தற்போது ராணுவ பயன்பாட்டிற்கு வந்துள்ள மூலிகை பெட்ரோல், பொது பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என்று நம்புவோம். 



Find Out More:

Related Articles:

Unable to Load More