சென்னை:
அங்கிருந்து... இங்கு... பின்னர் இங்கிருந்து... அங்கு... மீண்டும்... அதேபோலவா... என்று அரசியல் அரங்கை பற்றவைத்துள்ளார் இவர்.
இவர் யாருன்னா? முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன்தான். இவர் விரைவில் அ.தி.மு.க., வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் சேரப்போகிறார் என்ற செய்திதான் அரசியல் அரங்கை சூடாக்கி உள்ளது.
கடந்த, 1991 - 96 வரை, அ.தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணித்துறை அமைச்சராக வலம் வந்தவர் கண்ணப்பன். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி, யாதவர் சமுதாயத்தினர் ஆதரவுடன், 'மக்கள் தமிழ் தேசம்' கட்சியை துவங்கினார்.
கட்சி நடத்தி நம்மால் முடியாது சாமி என்பதுபோல தி.மு.க.,வில் சங்கமமம் ஆகி பின்னர் அங்கிருந்து மீண்டும் அ.தி.மு.க.,வுக்கு டைவ் அடித்தார். இப்போ... என்ன ஆச்சோ.. ஏது ஆச்சோ... தெரியலை... மீண்டும் அவர், தி.மு.க.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி அரசியல் அரங்கை பற்ற வைத்துள்ளது.