கட்... அங்கீகாரம் கட்... தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை

Sekar Tamil
விழுப்புரம்:
கட்... கட்... அங்கீகாரம் கட்... தமிழக அரசு அதிரடித்துள்ளதால் மாணவர்களின் படிப்பு என்னாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ் சித்த மருத்துவக்கல்லூரியில், கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி மோனிஷா, பிரியங்கா, சரண்யா என்ற மூன்று மாணவிகள், கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தனர். 



 தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில்மா ணவிகளின் மரணத்திற்கு கல்லூரி நிர்வாகமே காரணம் என்று பெற்றோர் போராட்டத்தில் குதிக்க இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. 


கல்லூரி தாளாளர் வாசுகி உட்பட 3 பேர் கைதும் செய்யப்பட்டனர். இங்கு படித்து வந்த பெரும்பாலான மாணவர்கள் அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், ஹோமியோபதி பாடப் பிரிவில் பயின்று வந்த 50 மாணவர்களுக்கு இன்னும் அரசு கல்லூரிகளில் இடம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரிக்கு 2013ம் ஆண்டு வழங்கப்பட்ட மருத்துவக் கல்வி பயிற்சி நிறுவனம் என்ற அங்கீகாரத்தை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இதனால் இங்கு படித்து வந்த மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Find Out More:

Related Articles: