லண்டன் மக்கள் வாய்பிளப்பு... நீளமான...ன..ன... சுரங்க சறுக்குமரம்...

Sekar Tamil
லண்டன்:
வாயை பிளந்து ஆச்சரியப்படுகின்றனர் லண்டன் மக்கள். எதற்காக தெரியுங்களா? காரணம் தெரிஞ்சுக்குவோமா?


இந்திய தொழிலதிபரான லட்சுமி மிட்டல் ஏற்பாட்டின் பேரில் லண்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்க சறுக்குமரம்தான் இப்படி பார்ப்பவர்களை வாயை பிளக்க வைத்துள்ளது. 


பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனில் கடந்த 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றதன் நினைவாக இங்குள்ள ராணி எலிசபத் ஒலிம்பிக் பூங்காவில் லட்சுமி மிட்டல் ஏற்பாட்டின் பேரில் இந்த மிகப்பெரிய சுரங்க சறுக்கு மரம் அமைக்கப்பட்டது.


114.5 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த சறுக்கு மரத்தை சென்றடைய 455 படிக்கட்டுகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். லிப்ட் மூலமாகவும் இதன் மேல் பகுதிக்கு சென்று சுமார் 20 மைல் தூரம்வரை லண்டன் நகரின் எழில் கொஞ்சும் இயற்கை அழகை கண்டு களிக்கலாம்.


இந்த சுரங்கப்பாதை சறுக்குமரம் உலகிலேயே மிக நீளமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சறுக்கு மரத்தின் மேல் பகுதியில் இருந்து கண்ணாடி பதிக்கப்பட்ட சுவர் மற்றும் கூரை வழியாக சறுக்கியபடியே இறங்கிவர பாதுகாப்பு கருதி மெத்தை மற்றும் தலைக்கவசம் அளிக்கப்படுகிறது.


இதுதான் லண்டன் வாசிகளை கவர்ந்து  இழுத்து வருகிறது.



Find Out More:

Related Articles: