புதுடில்லி:
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஒருவர் டில்லியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு சென்ற 17 இளைஞர்கள் மாயமாக மறைந்து போய்விட்டனர். இதுகுறித்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் ஏற்பட்டது. இவர்கள் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டனர் என்ற அதிர்ச்சிதான் அது.
இவர்கள் அங்கு போய் சேர இதற்கு உதவி புரிந்ததாக யாஸ்மின் என்பவர் டில்லியில் கைது செய்தது கேரளா போலீஸ். அவருடன் அவரது 4 வயது மகனும் காசர்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து, யாசின் அகமதுவை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.