ஓய்விற்காக பறந்தார்... கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்...

frame ஓய்விற்காக பறந்தார்... கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்...

Sekar Tamil
அமெரிக்கா:
பதவியிலிருந்து நிரந்தர ஓய்வு பெறுவதற்கு முன்பு தற்காலிக ஓய்விற்காக சென்றுள்ள அதிபர் ஒபாமா கோல்ப் விளையாடி மகிழ்ந்துள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.


விரைவில் அதிபரி பதவியிலிருந்து ஓய்வு பெறும் அமெரிக்க அதிபர் ஒபாமா தற்போது ஓய்விற்காக மார்த்தாவின் திராட்சைத் தோட்டம் என்கிற தீவுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தன் மனைவி மிஷல், மகள்கள் மலியா மற்றும் சாஷாவும் ஆகியோருடன் ஓய்வெடுத்து வருகிறார்.


இத்தீவில் உள்ள கோல்ப் விளையாட்டு மையத்திற்கு நண்பர்களுடன் சென்ற ஒபாமா சிறிது நேரம் கோல்ப் விளையாடி மகிழ்ந்தாராம். அவருடன் வெள்ளை மாளிகை அதிகாரி ஜோ பால்சன், கிறிஸ் பால், பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் க்ளிப்பர்ஸ் மற்றும் பலர் இணைந்து விளையாடி உள்ளனர். 


வரும் 21ம் தேதி வரை ஒபாமா "ஓய்வில்" இருப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அப்போ... அதுவரை கோல்ப் விளையாடினார், சீட்டு விளையாடினார், சைக்கிள் ஓட்டினார்ன்னு தொடர்ந்து செய்திகள் கொடுப்பீங்க... நடத்துங்க...


Find Out More:

Related Articles:

Unable to Load More