மனைவி பாஸ்போர்ட் காணோம்... டுவிட் போட்ட கணவருக்கு உதவி

frame மனைவி பாஸ்போர்ட் காணோம்... டுவிட் போட்ட கணவருக்கு உதவி

Sekar Tamil
டில்லி:
மனைவி பாஸ்போர்ட்டை தொலைக்க... கணவர் மட்டும்  தனியாக பறக்க... அவருக்கு உதவ முன்வந்துள்ளார் மத்திய அமைச்சர் சுஷ்மா... என்ன ஒன்றும் புரியலையா... இதே விஷயத்துக்கு வந்துட்டோம்.


பைசான் பட்டேல் என்பவர் தனது டுவிட்டரில் கணக்கில் சில தகவல்களை தெரிவித்திருந்தார். என்னன்னு? எனது மனைவி பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதால் துருக்கி ஏர்லைன்சில் நான் தனியாகவே பயணிக்கிறேன் என்று பதிவிட்டவர், தனது மனைவி போட்டோவை பக்கத்து சீட்டில் வைத்தபடி, இப்படித்தான் மனைவியோடு டிராவல் செய்கிறேன் என்ற ஒரு போட்டோவையும் வெளியிட்டார்.


இதை வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவு அமைச்சக டிவிட்டர் ஹேண்டில்களுடன் டேக் செய்திருந்தார். 
ஆனால், என்ன ஆச்சரியமோ... ஆச்சரியம்... உடனே சுஷ்மா சுவராஜிடமிருந்து டுவிட்டரில் பதில் வந்து விழுந்தது. எப்படி தெரியுங்களா?


உங்கள் மனைவியை என்னை தொடர்பு கொள்ள செய்யுங்கள். உங்கள் பக்கத்து சீட்டில் மனைவியை அமரச் செய்கிறேன் என்று டுவிட்டரில் பதில் சொல்லியிருந்தார் சுஷ்மா. மேலும், டூப்ளிகேட் பாஸ்போர்ட் ஏற்பாடு செய்துள்ளதாக மற்றொரு டிவிட்டிலும் சுஷ்மா தெரிவித்துக்க இப்போது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 


பைசானும் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று சுஷ்மாவை டுவிட்டரில் புகழ்ந்து தள்ளிவிட்டார். சாமானியனாக இருந்தால் என்ன அவர் இந்தியர் அல்லவா...



Find Out More:

Related Articles:

Unable to Load More