போரூர்:
நன்றாக இருந்தது... போதிய அளவும் இருந்தது என்று அமைச்சரின் பாராட்டுச்சான்றிதழ் அம்மா உணவகத்திற்கு கிடைத்துள்ளது.
இது நம்ம தமிழக அமைச்சரின் பாராட்டு இல்லீங்க... வேறு யாருன்னு கேட்கிறீங்களா? கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் பாராட்டுதான் அது.
கர்நாடகாவில் மின்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் டி.கே.சிவகுமார். இவர் ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரைக்காக பெங்களூரிலிருந்து பநீபெரும்புதூருக்கு வந்தார். அப்போது போருரிலுள்ள அம்மா உணவகத்தில் சட்டென்று நுழைந்த அவர்
ரூ.5க்கு பொங்கல் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
பின்னர் இதுகுறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது கருத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் அம்மா உணவகத்தில் சாப்பிட்ட பொங்கல், சுவையாக இருந்தது. போதிய அளவுக்கு இருந்தது என்று தெரிவித்துள்ளார். அம்மா உணவகத்தின் பெருமை இப்போ கர்நாடகா வரை பரவியாச்சுங்க...