மருத்துவமனையில் தீவிபத்து... 18 குழந்தைகள் பரிதாப பலி

frame மருத்துவமனையில் தீவிபத்து... 18 குழந்தைகள் பரிதாப பலி

Sekar Tamil
பாக்தாத்:
தீயின் நாக்குகளின் கோரப்பிடியில் சிக்கி 12 பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில்தான் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 12 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.


பாக்தாத்தின் மேற்கு பகுதியில் உள்ள யார்மவுக் மருத்துவமனையில் நடந்த இந்த துயர சம்பவத்தை கண்டித்து, குழந்தைகளின் பெற்றோர்களும், உறவினர்களும் போராட்டம் நடத்தினர். இரவு நேரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


இதில் 28 பெண் நோயாளிகளும், 8 குழந்தைகளும் தப்பி உள்ளனர். ஆனால் 12 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இந்த தீ விபத்தை தொடர்ந்து மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 


Find Out More:

Related Articles:

Unable to Load More