சவுதி:
கொடுக்கணும்... உடனே கொடுக்கணும் என்று அதிரடி உத்தரவு போட்டுள்ளார். போட்டுள்ளார்... யார் தெரியுங்களா?
சவுதியில் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உடன் சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு மன்னர் சல்மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 2500 பேர் வேலை இழந்துள்ளனர்.
இதுமட்டுமா? கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த 16000க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளப்பாக்கி வைத்துள்ளதால் தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கு கூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதை அடுத்து வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உடன் சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு மன்னர் சல்மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சவுதி மன்னர் இந்த அதிரடி உத்தரவு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இதையடுத்து அவர்கள் மன்னருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.