சிவபெருமானை சந்திக்க சுடுகாட்டில் பள்ளம் தோண்டி தவம்...

frame சிவபெருமானை சந்திக்க சுடுகாட்டில் பள்ளம் தோண்டி தவம்...

Sekar Tamil
புதுக்கோட்டை:
சுடுகாட்டில் பள்ளம் தோண்டி சிவபெருமானை சந்திக்கப் போகிறேன் என்று இவர் கிளப்பிய பீதியில் மக்களுக்கு நமுட்டு சிரிப்புதான் வந்துள்ளது. இந்த கேலிக்கூத்து நடந்துள்ளது புதுக்கோட்டையில்தான். விஷயத்தை பாருங்களேன்.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் (55). இவர் அறந்தாங்கியில் இந்து பரிஷத் அமைப்பு நகர செயலாளர். இவர் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் 10 அடிக்கு பள்ளம் தோண்டி அதில் அரை நிர்வாணமாக உட்கார்ந்தார். 


என்னடா இது புது டிரெண்டா இருக்கே என்று மக்கள் யோசிக்க... அப்போ போட்டார் பாருங்களேன் செமத்தியான ஒரு பிட்டை... நான் சிவபெருமானை சந்திக்க தவம் இருக்க போகிறேன் என்று. இது நடந்தது 2ம் தேதி... இவரோட தவம் தொடர்ந்து நடக்கவே மக்களுக்கு இதென்னடா புது வம்பா இருக்கே என்று தற்போது போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். 


இதையடுத்து போலீசார் அவரை சந்தித்து தவத்தை கைவிடுமாறு தெரிவித்துள்ளனர் "அன்பாக". அப்புறம் என்ன? அன்புக்கு கட்டுப்பட்டு அவரும் தவத்தை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார். அதோடு விட்டாரா..? போலீசாரிடம் தற்போது அம்பாள் எனக்கு தரிசனம் கொடுத்துட்டாங்க...


அதனால்தான் தவத்தை முடித்துக் கொண்டேன். சிவபெருமானை சந்திக்க முடியலை... அதனால் மீண்டும் வேறொரு இடத்தில் தவம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி போலீசாருக்கும் "திகிலை" கிளப்பி விட்டுள்ளார். வருஷத்துக்கு ஒருவர் இப்படி புறப்படறாங்கப்பா....



Find Out More:

Related Articles:

Unable to Load More