என்ன கொடூரம்... கொலை செய்து ஹோமத்தில் எரித்த கொடூரம்

frame என்ன கொடூரம்... கொலை செய்து ஹோமத்தில் எரித்த கொடூரம்

Sekar Tamil
கர்நாடகம்:
இப்படியும் நடக்குமா? ஆனால் நடந்துள்ளதே! கொடூரமான கொலையாக இது உள்ளது என்று கர்நாடக மக்கள் அதிர்ந்துதான் போய் உள்ளனர். அந்த கொடூர விஷயம் இதுதான்.


கர்நாடக மாநிலத்தில் தொழிலதிபரை அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். அதற்கு பிறகு அவரது உடலை ஹோம குண்டத்தில் வைத்து எரித்து சாம்பலை கரைத்துள்ள சம்பவம்தான் அது.


கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த பாஸ்கர் ஷெட்டி. இவர் சவுதியில் சொந்த தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளது. 


 இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் பாஸ்கர் ஷெட்டியின் மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைதான் போலீசாருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 


போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், மனைவி, மகன் இருவரும் உண்மையை ஒத்துக்கொண்டுள்ளனர். இருவரும் சேர்ந்து பாஸ்கர் ஷெட்டியை கொலை செய்து ஹோமகுண்டத்தில் எரித்துள்ளனர் என்பதுதான் அந்த அதிர்ச்சி. இதற்காகவே தற்காலிகமாக ஹோமகுண்டம் ஒன்றையும் உருவாக்கி உள்ளனர். எரித்த சாம்பல், எலும்புகளை நதியில் கரைத்து உள்ளதும் தெரியவந்தது. இச்சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.



Find Out More:

Related Articles:

Unable to Load More