பிரான்ஸ்:
எந்த மாடலில் போட்டாலும் தடை...தடைதான் என்று கேன்ஸ் நகரம் பிடிவாதம் பிடித்துள்ளது. எதற்காக என்று தெரியுங்களா?
முஸ்லீம் பெண்கள் அணியும் வித்தியாசமான நீச்சல் உடைக்குதான் இப்படி தடைவிதித்து பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்நகர் மேயர் டேவிட் லிஸ்னர்ட் வெளியிட்டுள்ள உத்தரவு இப்படி இருக்கு!
பிரான்ஸ் மற்றும் அதன் பல்வேறு பகுதிகளில் மதம் சார்ந்த தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தபடி இருக்கு. எனவே மதச்சார்பின்மையை நிலை நாட்டினால் தான் இந்த தாக்குதல்கள் முற்றுப்பெறும்.
கேன்ஸ் நகரில் உள்ள கடற்கரைக்கு செல்பவர்கள் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அங்கு செல்லும் முஸ்லீம் பெண்கள் தங்களுக்கென வடிவமைத்த நீச்சல் உடைகளை தவிர்க்க வேண்டும். தடையை மீறி அந்த ஆடை அணிந்து கடற்கரைக்கு வரும் பெண்களிடம் 40 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும். இப்படி உத்தரவு போட்டு அதிரடித்துள்ளார்.