டமாஸ்கஸ்:
ஒரு பக்கம் உள்நாட்டு போர் கதிகலக்கி வரும் நிலையில் நெஞ்சுப்பகுதிகள் ஒட்டிய நிலையில் இரட்டைக்குழந்தைகள் பிறந்து சிரியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப்போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கு நடக்கும் கடும் சண்டை மக்கள் மத்தியில் எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தவுமா நகரில் ஒரு பெண்ணுக்கு இரட்டைக்குழந்தைகள் நெஞ்சுப்பகுதிகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளன.
அந்தக் குழந்தைகளுக்கு நவ்ராஸ் மற்றும் மோவஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளும், அவற்றின் தாயும் ஆம்புலன்சு மூலமாக டமாஸ்கஸ் அருகே அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டன.
குழந்தைகளை உடன் அறுவை சிகிச்சை செய்து, பிரிக்காவிட்டால் இறந்து விடும் என்ற அபாய நிலை உள்ளது. எனவே இதற்கு உதவுமாறு உலக சுகாதார நிறுவன உதவியை சிரியா டாக்டர்கள் கோரி உள்ளனர். போர்க்களத்தில் பூத்த இந்த மலர்கள் வாடாமல் இருக்க வழி செய்யுங்கள்...