சீசனுக்காக கடத்தல்... ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

Sekar Tamil
நெல்லை:
சீசனுக்காக கடத்தி வந்தாங்களா... மடக்கி பிடித்த போலீசாரே அதிர்ந்து தான் போய்விட்டனர். எதை பார்த்து தெரியுங்களா?


நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் காரில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசாருக்கே ஷாக்தான். சீசனுக்கே இப்படி கடத்தி வந்தாங்கன்னா? என்று அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


குற்றாலத்தில் தற்போது சீசன் காலமாகும். அருவிகளில் தண்ணீர் அளந்தே கொட்டினாலும் சுற்றுலாப்பயணிகளின் வரத்து மட்டும் குறையவே குறையாது. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.


தென்காசி சாலையில் 2  டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது அரசு உத்தரவின் படி இதன் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா வரும் பயணிகள் "பிளாக்கில்" மது வாங்குகின்றனர். இதற்காகத்தான் மதுபாட்டிகள் கடத்தப்பட்டு வருகின்றன. இந்த தகவல் போலீசாருக்கும் கிடைக்க, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு குற்றாலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.


Find Out More:

Related Articles: