கோவை:
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் சத்தியமங்கலத்தை சேர்ந்த முகமது அலிகானை கர்நாடக போலீசார் கைது செய்ததற்கு தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சத்தியமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகமது அலிகான். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று விடுதலையானார். தற்போது சத்தியமங்கலத்தில் காளான் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் உணவு விடுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த முகமது அலிகான் சிலரால் கடத்தப்பட்டதாக செய்தி வர பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதுகுறித்து அவரது சகோதரர் உஸ்மான் அலி, போலீசில் புகார் செய்தார். விசாரணையில், கடந்த 2013ம் ஆண்டு பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக முகமது அலிகானை, பெங்களூரு காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஸ் தலைமையிலான போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
3 ஆண்டுகளுக்கு பிறகு குண்டு வெடிப்பு சம்பவத்தில் கர்நாடக போலீஸார் முகமது அலிகானை கைது செய்துள்ளதற்கு தமிழக முஸ்ஸீம் முன்னேற்ற கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.