சென்னை:
லேசாக இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம் என்று வானிலை மையம் மழை பற்றி சொல்லியிருக்காங்க...
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா!
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 24 மணி நேரத்தில் அப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் 2 நாட்களுக்கு வட தமிழகம் புதுவையில் சில இடங்களில் பரவலாக மழை பெய்யும். தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென் மேற்கு பருவ காலத்தில் மழை இயல்பான அளவை விட 7 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் மழை பெய்யலாம்... அல்லது பெய்யாமலும் போகலாம். சரிங்களா? ஆனால் வெப்பம் மட்டும் குறைந்தபாடில்லை.