நாய்க்கு அதிபர் பெயர்... கைது செய்து உள்ளே தள்ளிய போலீசார்

Sekar Tamil
நைஜர்:
நாய்க்கு போய் அதிபர் பெயரா... பிடிங்கய்யா அவனை என்று போலீசார் வழக்குப்போட்டு ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த கூத்து நடந்துள்ளது நைஜீரியாவில்.


விஷயம் என்னன்னா? நைஜீரியா நாட்டின் அதிபர் முகமது புஹாரியின் பெயரை நாய்க்கு வைச்சிருக்காருங்க... ஒருத்தர்... என்ன தைரியம் என்று போலீசார் இப்போ அவரை கைது செய்துள்ளனர்.


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் தென்பகுதியில் கிறிஸ்தவர்களும், வடபகுதியில் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு நைஜீரியாவில் உள்ள ஓகுன் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு அந்நாட்டின் அதிபரான முகமது புஹாரியின் பெயரை வைச்சிருக்கார்.


அத்தோடு விட்டாரா? நாயின் உடலின் இருபக்கங்களிலும் நைஜீரிய மொழியில் முகமது புஹாரி என்ற பெயரையும் எழுதி வைத்துள்ளார்.


அதிபர் பிறந்த வடக்கு நைஜீரியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு இந்த செயல் ஆத்திரத்தை உண்டாக்க... போலீசுக்கு புகார்கள் பறந்தன.


இதுபோன்ற செயல்கள் மதமோதல்களை தூண்டி விடுவதற்கு காரணமாக அமையும் என்பதால் உடனே நடவடிக்கையில் இறங்கிய போலீசார் அதிபரின் பெயரை நாய்க்கு சூட்டிய அந்நபரை கைது


Find Out More:

Related Articles: