வாடிகன்:
போய் மீட்புபணிகளில் ஈடுபடுங்க என்று வாடிகனில் உள்ள தீயணைப்பு வீரர்களை போப் பிரான்சிஸ் இத்தாலிக்கு அனுப்பி உள்ளார்.
இத்தாலியின் மத்தியப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 247 பேர் பலியாகி உள்ளனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 300-க்கும் அதிகமானவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இத்தாலி நாட்டில் நிலநடுக்க மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக வாடிகனில் உள்ள தீயணைப்பு வீரர்களை போப் பிரான்சிஸ் அனுப்பியுள்ளார். மொத்தமுள்ள தீயணைப்பு படை வீரர்களில் ஆறில் ஒரு பங்கு வீரர்களை வாடிகன், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அமடிரிஸ் நகருக்கு அனுப்பி உள்ளது.