செம ஸ்வீட்டுப்பா... செம வெயிட்டுப்பா... 12,500 கிலோவில் "லட்டு"

Sekar Tamil
ராஜமுந்திரி:
அட்ரா சக்க... அட்ரா சக்க அம்புட்டு பெரிசா... அம்புட்டு பெரிசா என்று கேட்க வைத்து விட்டார்...


விஷயம் என்னன்னா?  ஆந்திராவைச் சேர்ந்த இனிப்பு கடைக்காரர் ஒருவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலக சாதனைக்காக 12,500 கிலோ எடையிலான லட்டு தயாரித்து விநாயகருக்கு படைத்துள்ளார் என்பதுதான். இது எப்படி இருக்கு! 


விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜீன ராவ் என்பவர்தான் இந்த பிரம்மாண்ட லட்டை தயாரித்துள்ளார். 2400 கிலோ சுத்தமான நெய், 3350 கிலோ கடலை மாவு, 4950 கிலோ சர்க்கரை, 400 கிலோ முந்திரி, 200 கிலோ பாதாம், 125 கிலோ ஏலக்காய், 30 கிலோ பச்சை கற்பூரம் என இந்த லட்டு தயாரிக்க ஆனவற்றின் லிஸ்ட் நீள்கிறது. 


இவர் கடந்த ஆண்டு 6000 கிலோ எடையுள்ள லட்டினை தயாரித்து விநாயகருக்கு படைத்து அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொடுத்தார். இப்போது அதை முறியடித்து 12,500 கிலோவில் லட்டு செய்து கின்னசில் இடம் பிடிக்க முயற்சி செய்துள்ளார். 


இந்த லட்டு செய்ய இவருக்கு ரூ.30 லட்சம் செலவாகி உள்ளதாம். உலகின் மிகப் பெரிய லட்டினை தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதே தனது லட்சியம் என மல்லிகார்ஜீனா ராவ் தெரிவித்துள்ளார். செம ஸ்வீட்டுப்பா... செம வெயிட்டுப்பா...



Find Out More:

Related Articles: