ஹரியானா:
இப்படி செய்தால் எப்படிங்க...? ஹரியானாவே இந்த சம்பவத்தால் தலை குனிந்து போய் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். விஷயம் என்னன்னா?
ஹரியானா சட்டசபையில் ஜெயின் சமூக தலைவர் முக்கால் நிர்வாணமாக உரையாற்றிய சம்பவம்தான் அது. அவர் நிர்வாணமாக உரையாற்றிய புகைப்படமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஹரியானாவின் மானத்தை இன்டர்நெட் ஏற்றி வருகிறது.
ஹரியானா சட்டசபை கூட்டத்திற்கு டருண் சாஹர் என்ற ஜெயின் சமூக தலைவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். இதில் அவர் 40 நிமிடம் பேசினார். ஆனால் அவர் முக்கால் நிர்வாணமாக நின்று சட்டசபையில் உரையாற்றியதுதான் பெரிய சர்ச்சைக்கு இடமாகி உள்ளது.
கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அவர் அவரது சமூக வழக்கப்படி கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் பேசினார் என்றாலும் மக்கள் பிரதிநிதிகள் நிறைந்த சட்டசபையில் இப்படி பேசியது ஏற்றுக்கொள்ள கூடியதா என்பதை விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். ஒரு தரப்பினர் சரி என்றாலும்... மக்கள் ஹரியானாவின் மானம் இன்டர்நெட் ஏறிவிட்டது என்று நொந்து போய் உள்ளனர்.