அதிக சுமையால் ஓமன் கடல் பகுதியில் மூழ்கிய இந்திய கப்பல்

frame அதிக சுமையால் ஓமன் கடல் பகுதியில் மூழ்கிய இந்திய கப்பல்

Sekar Tamil
மஸ்கட்:
அதிக சுமையால் இந்திய சரக்கு கப்பல் ஓமன் நாட்டு கடல் பகுதியில் மூழ்கியது. உடன் அதில் இருந்த 11 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல், சரக்குகளை ஏற்றிக் கொண்டு, ஏமன் நாட்டின் அல் முக்காலா துறைமுகத்திற்கு சென்றது.


இதில் 69 வாகனங்கள், டயர்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இருந்தன. இது அதிகளவு எடை என்று கூறப்படுகிறது. ஓமன் நாட்டு கடல் பகுதியில் சென்ற போது நேற்று முன்தினம் சென்ற போது, அதிக சுமை இருந்ததால் கப்பல் மூழ்கத் துவங்கியது.


இதை அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், பார்த்துவிட்டு கப்பலில் இருந்த ஊழியர்கள் 11 பேரையும் பத்திரமாக மீட்டனர்.



Find Out More:

Related Articles:

Unable to Load More