ஏடன்:
ஏமனில் 60 உயிர்களை பலிவாங்கிய தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இச்சம்பம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏமன் நாட்டில் உள்ள துறைமுக நகரமான ஏடனில் ராணுவ முகாமில் நேற்று காலை ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடந்து கொண்டிருந்தது. இதற்காக முகாம் வாசலில் பலர் வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர்.
வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வந்த ஒரு தீவிரவாதி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த காரை வெடித்துச் சிதற வைக்க
இந்த கொடூர தாக்குதலில் 60 பேர் பலியாகினர். 29 பேர் சீரியசான நிலையில் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாம். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை உயரும என்று அஞ்சப்படுகிறது.
இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்று அதன் ஆதரவு செய்தி நிறுவனமான அமாக் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.