பார்த்தார்... பரிசை கொடுத்தார்... போப் ஆண்டவருக்கு...

Sekar Tamil
வாடிகன் சிட்டி:
பார்த்தார்... பார்த்தார்... பரிசை கொடுத்தார்... யாருக்கு யார் தெரியுங்களா?


வாடிகன் அரண்மையில் போப் பிரான்சிசை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பர்க் சந்தித்து பேசினார். அப்போது இணைய இணைப்பை பெற சூரிய சக்தியின் மூலம் இயங்கும் ஆளில்லா விமான மாதிரியை, அவருக்கு நினைவுப் பரிசாக அளித்தார்.


பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பர்க் தனது மனைவி பிரிசில்லா சானுடன் இத்தாலி தலைநகர் ரோம் அருகிலுள்ள வாடிகனுக்கு சென்றார். பின்னர் வாடிகன் அரண்மனையில் போப் ஆண்டவரை சந்தித்து பேசினார்.


போப்பின் இல்லமான சான்ட்டா மார்ட்டா குடிலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இன்டர்நெட் வசதி இல்லாத பகுதிகளில் இணைய இணைப்பு இல்லாத பகுதியில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் 'அக்கிலா' என்ற ஆளில்லா விமானத்தின் மாதிரியை அவருக்கு பரிசாக அளித்தார்.


Find Out More:

Related Articles: