விமான விபத்தில்தான் இறந்தார்... நேதாஜி பற்றி அதிரடி தகவல்...

Sekar Tamil
லண்டன்:
அவர் விமான விபத்தில்தான் இறந்தார் என்று திட்டவட்டமாக லண்டனில் உள்ள ஒரு இணையதளம் தெரிவித்துள்ளது. 


யாரை பற்றிய செய்தி தெரியுங்களா? சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிதான் இப்படி கூறப்பட்டுள்ளது. கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18 ம் தேதி நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக ஜப்பான் அரசு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாக லண்டனில் உள்ள ஒரு இணையதளம் தெரிவித்துள்ளது.


தொடர்ந்து நேதாஜி மரணம் தொடர்பான சர்ச்சை நிலவிக்கொண்டே இருக்றிது. விமான விபத்தில் இறந்தார், சுதந்திரத்திற்கு பின்னரும் வெளியில் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்தார் என்று பலவகையான தகவல்கள் உலா வருகின்றன.


இது தொடர்பாக பல குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இருப்பினும் இறுதி முடிவு என்பது என்னவென்றே தெரியாத நிலையில்தான் உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான பல ஆவணங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இருப்பினும் அவரது மரணம் குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


இந்நிலையில் லண்டனை மையமாக வைத்து செயல்படும் இணையதளம் வெளியிட்ட செய்திதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


"நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கடந்த 1945ம் வருடம் ஆகஸ்ட் 18 ம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்ததாக ஜப்பான் அரசு தயாரித்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை 1956ம் வருடம் தயாரிக்கப்பட்டு, டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்திடம் அளிக்கப்பட்டது. இது ரகசிய ஆவணம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதால், இரு தரப்பும் ஆவணத்தை வெளியிடவில்லை.


ஜப்பானிய மொழியில் 7 பக்கங்கள் கொண்ட அறிக்கையாகவும், 10 பக்கங்கள் கொண்ட ஆங்கில அறிக்கையாகவும் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விமானம் கிளம்பியவுடன் வெடித்ததில் நேதாஜி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அன்று மாலையே அவர் மரணமடைந்தார்.


தைவான் நேரப்படி நேதாஜி மாலை 7 மணியளவில் மரணமடைந்தார். 


ஆகஸ்ட் 22ம் தேதி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் உண்மையா... உண்மையா... என்ற பரபரப்பு கிளம்பி உள்ளது.


Find Out More:

Related Articles: