உஸ்பெகிஸ்தான்:
உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவ் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இத்தகவலை துருக்கி பிரதமர் அந்நாட்டு கேபினேட் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
உஸ்பெகிஸ்தான் நாடு, முன்னாள் சோவியத் யூனியனிடம் இருந்து விடுதலை பெற்ற நாடு. இதன் அதிபராக கடந்த 1991-ம் ஆண்டு முதல் இஸ்லாம் கரிமோவ் (78) இருந்து வந்தார்.
இந்நிலையில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இஸ்லாம் கரிமோவ் மரணம் அடைந்தார். உஸ்பெகிஸ்தான் அரசு இத்தகவலை உறுதி செய்யவில்லை. இருப்பினும், கரிமோவ் இறந்த தகவலை துருக்கி பிரதமர் அந்நாட்டு கேபினேட் தொலைக்காட்சியில் அறிவித்தார்.