தப்பா சொன்னியா... 1000 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு...

frame தப்பா சொன்னியா... 1000 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு...

Sekar Tamil
வாஷிங்டன்:
டெய்லி மெய்ல் பத்திரிகை மீது அவதூறு வழக்கு போட்டு ஆயிரம் கோடி ரூபாய் வரை நஷ்டஈடு கேட்டுள்ளார் இவர். யார் தெரியுங்களா அந்த பிரபலம்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்பின் மனைவி மெலனியாதான் அவர். சரி இவர் எதற்கு ‛டெய்லி மெய்ல்' பத்திரிகை மீது அவதூறு வழக்கு போடணும்... ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்கணும்....


விஷயம் இருக்கே... ‛டெய்லி மெய்ல்' பத்திரிகையும், அமெரிக்காவைச் சேர்ந்த வலைத்தள பதிவர் வெப்ஸ்டர் டார்ப்ளேயும், 1990-களில் மெலனியா பாலியல் தொழிலாளியாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தனர். 


இதற்காகத்தான் மெலனியா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்டதற்காக ஆயிரம் கோடி (150 மில்லியன் டாலர்) நஷ்டஈடு வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.


மெலனியா ஸ்லோவேனியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Find Out More:

Related Articles:

Unable to Load More