கர்நாடகா:
எல்லை மீறி நடந்து கொள்ளும் கன்னடர்களால் தமிழர்கள் செம டென்ஷனில் உள்ளார்கள் என்று தகவல்கள் வெளிவந்து உள்ளது.
என்ன விஷயம் என்றால்... தண்ணீர் தரவே மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் பிடித்த பிடிவாதத்தை கோர்ட்டிற்கு சென்று உடைத்து... தடையை மீறி தண்ணீரை காவிரியில் திறந்து விட செய்து விட்டார் தமிழக முதல்வர்.
சுப்ரீம் கோர்ட்டும் உண்மையை உரக்கவே சொல்லி... தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று போட்டுச்சு அதிரடி உத்தரவை. வேறு வழியின்றி சட்டத்தை மதிக்க கனத்த இதயத்துடன் தண்ணீர் திறந்து விடுவதாக கூறி தண்ணீர் திறந்து விட்டார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
இதனால் அங்கு பந்த் உட்பட பல போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் கன்னடர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதன் உச்சக்கட்டமாக முதல்வர் ஜெ.,வின் உருவ படத்தை காலால் மிதித்து அவமரியாதை செய்கின்றனர் கன்னடர்கள். இதை விட பெரிய கொடுமையாக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மை ஒன்றை வைத்து பாடைகட்டி தூக்கி சென்று சங்கு ஊதி இறுதி ஊர்வலம் நடத்தி உள்ளனர்.
பின்னர் அதனை தீ வைத்து எரித்து அத்துமீறி ஒரு மாநிலத்தின் முதல்வரை அவமரியாதை செய்துள்ளனர். இதை தடுக்க வேண்டிய அம்மாநில போலீசார் அதை செய்யவில்லை. இந்த செயலை கர்நாடக முதல்வரும் கண்டிக்கவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
இதுபோல் அநாகரிமாக நடந்து கொள்ளும் கன்னடர்களுக்கு பதிலடியாக தமிழர்களும் களத்தில் குதித்தால் இருமாநிலத்தின் சுமூக உறவு பாதிக்கப்படும். மேலும் தேவையற்ற பதற்றமான சூழல் ஏற்படும்.