ராஜினாமா... ராஜினாமா.. ஆம்ஆத்மி எம்எல்ஏ... ராஜினாமா...

Sekar Tamil
புதுடில்லி:
ராஜினாமா... இந்தாங்க பிடிங்க என் ராஜினாமாவை என்று முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளார் எம்எல்ஏ. அட இது நம்ம தமிழ்நாட்டில் இல்லீங்க... (அம்புட்டு தைரியமா) டில்லியில்தான் இந்த ராஜினாமா.


கொலை மிரட்டல், வக்பு வாரிய நியமன முறைகேடு என  வழக்குகளில் சிக்கி சின்னாபின்னமாகி வரும்ஆ ம் ஆத்மி எம்.எல்.ஏ., அமனதுல்லா கான் தனது பதவியை ராஜியனாமா செய்துள்ளார்.


இந்த ராஜினாமா குறித்து அவர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார். 


டில்லி ஓக்லா தொகுதி எம்.எல்.ஏ., அமனதுல்லா. இவர் மீது அவரது உறவுகார பெண் ஒருவர் கொடுத்த புகார் பெரும் பரபரப்பு கிளம்ப  ஜாமீயா நகர் போலீசார் ஐ.பி.சி. சட்டபிரிவுகள் 506, 509, 498A, 120B போன்ற பிரிவுகளில் எம்எல்ஏ மீது எப்.ஐ.ஆர்., பதிந்தனர்.


அப்புறம் கைது நடவடிக்கை... பின்னர் ஜாமீனில் வெளிவருதல் என்று வந்த அவர் மீது... வக்பு வாரியத்தில் முக்கிய பதவிகளில் ஆட்களை நியமிப்பதில் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட இதுதொடர்பாக, ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அமனதுல்லா மீது வழக்கு பதிந்து முதல்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.


இத்தனை பிரச்னைக்கு இடையில்இ இவர் நேற்று டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார்.


அதில் என்னுடைய நேர்மையும், ஈடுபாடும் சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் என் மீதும் என்னுடைய குடும்பத்தினர் மீது பொய் குற்றச்சாட்டுகளை சாட்டியுள்ளனர். அதனால், ஆம் ஆத்மி கட்சி எனக்கு அளித்துள்ள அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலக விரும்புகிறேன். அனைத்து பதவிகளை நான் ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.



Find Out More:

Related Articles: