தங்கம் வென்றார்... தமிழகத்தின் மகன் என்று பாராட்டு வாங்கினார்...

Sekar Tamil
சென்னை:
தமிழகத்தின் மகன் என்று கவர்னர் வாயால் பாராட்டு வாங்கியுள்ளார் மாரியப்பன். இந்த தங்க மகன் தமிழ்நாடு சேலம் பகுதியை சேர்ந்தவர்.


பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் பெற்ற சேலத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதில் முக்கியமாக தமிழக கவர்னர் வித்தியாசாகர் ராவின் பாராட்டு அனைவரையும் கவர்ந்துள்ளது.


கவர்னர்வெ ளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுங்களா:


சாதிப்பதற்கு மாற்றுத்திறன் என்பது ஒரு தடை அல்ல என்பது இதன் மூலம் விளங்குகிறது. "தமிழகத்தின் மகனான" மாரியப்பனை வாழ்த்துகிறேன்.  பல வெற்றிகளை அவர் குவிக்க வேண்டும். மேலும் வெள்ளி வென்ற வருண்சிங்கிற்கும் எனது பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். தங்கம் பெற்ற தமிழ்நாட்டு மகனுக்கு இதை விட வேறு என்ன பெருமை வேண்டும்.


Find Out More:

Related Articles: