இடியுடன் கூடிய மழை... பெய்யும்... வானிலை மையம் தகவல்

frame இடியுடன் கூடிய மழை... பெய்யும்... வானிலை மையம் தகவல்

Sekar Tamil
சென்னை:
இன்னைக்கு தமிழகத்தில் இடியுடன் கூடி மழை பெய்யும் என்று சொல்லியிருக்கு வானிலை மையம்... பெய்தால் பூமி குளிர்ந்து மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.


காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் இன்று (11ம் தேதி) இடியுடன் கூடி மழைக்கு வாய்ப்புள்ளதாம். இதனால், தமிழகம் - புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.


சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு வங்கக் கடற்பகுதியில் ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் வெளிமண்டலத்தில் உருவாகியிருந்த மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறலாம் என்பதால் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Find Out More:

Related Articles:

Unable to Load More