அதிரடித்த வருமானவரித்துறை... 40 இடங்களில் ரெய்டு...ரெய்டு...

frame அதிரடித்த வருமானவரித்துறை... 40 இடங்களில் ரெய்டு...ரெய்டு...

Sekar Tamil
சென்னை:
அதிரடி... அதிரடி என்று களம் இறங்கிய வருமானவரித்துறையினரின் அதிரடியால் ஆடிப்போய் உள்ளனர் அரசியல்வாதிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.


அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த அதிமுக மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னை மேயர் சைதை துரைசாமி வீடு உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டு மற்ற அரசியல்வாதிகள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. 


இன்று காலை முதல் வருமான வரி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில் திண்டுக்கல்லில் இருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சி.ஐ.டி,. நகரில் இருக்கும் சென்னை மேயர் சைதை துரைசாமி வீடு, தாம்பரத்தில் இருக்கும் அவரது மகன் வெற்றியின் பண்ணை வீடு என்று பல இடங்களில் பரபரப்பாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


இதுமட்டுமா... கோவை ராஜவீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதிகளில் உள்ள கீர்த்திலால் நகைக்கடை, துடியலூர் நரசிம்ம நாயக்கன் பாளையம் வைர தொழிற்சாலை, மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி மற்றும் அதன் தலைவர் சேதுராமன், துணைத் தலைவர் குருமூர்த்தி ஆகியோரது வீடு உள்ளிட்ட பல இடங்களில் ரெய்டு நடந்தது. இதனால் அரசியல்வாதிகள் கிலி அடைந்துள்ளனர்.


Find Out More:

Related Articles:

Unable to Load More