தன் கையால் தன் கண்ணை குத்திக்கொண்ட கர்நாடகா...

Sekar Tamil
பெங்களூர்:
தன் கையாலேயே தன் கண்ணை குத்திக் கொண்டாலும் வலிக்குமா... வலிக்காதா... வலிக்கும் இல்லீங்களா? அதுதான் நடந்துள்ளது கர்நாடகா விஷயத்தில்.


காவிரியில் தண்ணீர் திறந்து விடும் பிரச்னையில் பெரும் கலவரமே மூண்டது பெங்களூருவில். தமிழர்கள் தாக்கப்பட... தமிழக பஸ்கள், லாரிகள் தீக்கிரையாயின.


இதனால் கர்நாடகாவில் விளையும் காய்கறிகளை தமிழகத்திற்கு லாரிகள் வாயிலாக கொண்டு செல்ல முடியாததால் அம்மாநில விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதான் தன் கையால் தன் கண்ணையே குத்திக்கொள்ளவது என்பதோ!


தமிழக லாரி டிரைவர்களை குறி வைத்து கன்னட அமைப்பினர் தாக்கி வீடியோக்களை வெளியிட்டதால், பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. நிலைமை சீராகும் வரை கர்நாடகாவுக்கு லாரிகளை இயக்கப்போவதில்லை என தமிழக லாரி உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 


இதனால் கர்நாடகாவிலிருந்தும் தமிழகத்திற்கு லாரிகள் இயங்கவில்லை. தொடர்ந்து கர்நாடகாவில் பெருமளவில் தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், குடைமிளகாய் போன்றவற்றை பயிரிட்ட விவசாயிகள் விலை வீழ்ச்சியை சந்தித்து நஷ்டத்தை கொள்முதல் செய்து வருகின்றனர்.  


கடந்த வாரம் கிலோ ரூ.28-க்கு விற்பனையான குடை மிளகாய், தற்போது, ரூ.12-க்கு விற்பனையாகிறது. வெங்காயத்தின் மொத்த மார்க்கெட் விலை ரூ.20லிருந்து ரூ.8-ஆக குறைந்துள்ளது. இதேபோல் பல காய்கறிகளின் விலையும் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளதால் கர்நாடக விவசாயிகளின் தலையில் நஷ்டம் என்ற துண்டுதான் விழுந்துள்ளது.


Find Out More:

Related Articles: